புதிய உச்சத்தை நோக்கி இந்திய பொருளாதாரம்: செப்டம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் 1.73 லட்சம் கோடி ரூபாய்!
புதிய உச்சத்தை நோக்கி இந்திய பொருளாதாரம்: செப்டம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் 1.73 லட்சம் கோடி ரூபாய்!
UPDATED : அக் 01, 2024 09:59 PM
ADDED : அக் 01, 2024 09:38 PM

புதுடில்லி: செப்., மாதம் ஜி.எஸ்.டி., மூலம் 1.73 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 6.5 சதவீதம் அதிகம் ஆகும்.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., 2017 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டது. மத்திய நிதியமைச்சர் தலைமையிலான இக்குழுவில் மாநில நிதி அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாதம் ஒன்றாம் தேதி அன்று, அதற்கு முந்தைய மாத வசூல் நிலவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், செப்., மாதம் ரூ.1.73 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது.
அதில்,
சிஜிஎஸ்டி -ரூ.31,400 கோடி
எஸ்ஜிஎஸ்ட -ரூ.39,300 கோடி
ஐஜிஎஸ்டி- ரூ.90,600 கோடி
செஸ் ரூ.11,900 கோடி வசூல் ஆகி உள்ளது.
கடந்த ஆண்டு செப்., மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.62 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது.
9 மாதங்களில்
இந்தாண்டு கடந்த 9 மாதங்களில் ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.10.9 லட்சம் கோடி வசூல் ஆனது. இது கடந்த ஆண்டு காலகட்டத்தை காட்டிலும் 9.5 சதவீதம் அதிகம். அப்போது ரூ.9.9 லட்சம் கோடி தான் வசூல் ஆகி உள்ளது.
2023 - 24 நிதியாண்டில் ஜி.எஸ்.டி., மூலம் மொத்தம் ரூ.20.18 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது. அதில் ஏப்., மாதம் அதிகபட்சமாக ரூ.2.10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. மாதந்தோறும் சராசரியாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது.
பொருளாதார வளர்ச்சி
ஜி.எஸ்.டி., வசூல் அதிகரிப்பு என்பது, சர்வதேச அளவிலான சூழ்நிலை ஸ்திரமற்று இருக்கும் நிலையில், இந்தியாவின் நிதிநிலைமை மற்றும் பொருளாதாரம் வளர்ந்து வருவதை பிரதிபலிக்கிறது.