நவ., மாத ஜி.எஸ்.டி., வசூல் 1.82 லட்சம் கோடி ரூபாய்
நவ., மாத ஜி.எஸ்.டி., வசூல் 1.82 லட்சம் கோடி ரூபாய்
ADDED : டிச 01, 2024 10:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நவ., மாதம் ரூ.1.82 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
இந்த ரூ.1.82 லட்சம் கோடி ஜி.எஸ்.டி.,வசூலில்,
சிஜிஎஸ்டி- ரூ.34,141 கோடி
எஸ்ஜிஎஸ்டி - ரூ.43.047 கோடி
ஐஜிஎஸ்டி- ரூ.92,828 கோடி
செஸ் -ரூ.13,253 கோடி அடங்கும்.
இது கடந்த ஆண்டு (2023) நவ., மாதத்தை காட்டிலும் 8.5 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது, ரூ.1.68 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வசூல் ஆகி இருந்தது.
இந்த ஆண்டு அதிகபட்சமாக ஏப்., மாதம் ரூ.2.10 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வசூலாகி புதிய சாதனை படைத்து இருந்தது. இதற்கு அடுத்த அக்., மாதம் ரூ.1.87 லட்சம் கோடி வசூல் ஆகியது குறிப்பிடத்தக்கது.