தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஜி.எஸ்.டி., வசூல் 6.20% உயர்வு

 ஜி.எஸ்.டி., வசூல் 6.20% உயர்வு

 ஜி.எஸ்.டி., வசூல் 6.20% உயர்வு


ADDED : பிப் 03, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: கடந்த மாதம், நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 6.20 சதவீதம் உயர்ந்து 1.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே, கடந்த மூன்று மாதங்களில் அதிகபட்ச வரி வசூல் ஆகும். கடந்தாண்டு ஜனவரியில் ஜி.எஸ்.டி., வருவாய் 1.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த ஜனவரியில், உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகளில் இருந்து கிடைக்கும் வரி வருவாய் 4.80 சதவீதம் அதிகரித்து 1.41 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி வரி வருவாய் 10.10 சதவீதம் உயர்ந்து 52,253 கோடி ரூபாயாகவும் இருந்தது. மொத்தம் 22,665 கோடி ரூபாய்க்கு ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த மாதத்துக்கான ஜி.எஸ்.டி., வசூல் ஐந்து சதவீதம் அதிகரித்து 6,618 கோடி ரூபாயாக உள்ளது.

ஜனவரி 2026 பிரிவு மதிப்பு (ரூ. கோடியில்) மத்திய ஜி.எஸ்.டி., 38,792 மாநில ஜி.எஸ்.டி., 47,817 ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., 1,06,775 மொத்த வசூல் 1,93,384



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us