நொய்டாவில் ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தற்கொலை! 15வது மாடியில் இருந்து குதித்து விபரீதம்
நொய்டாவில் ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தற்கொலை! 15வது மாடியில் இருந்து குதித்து விபரீதம்
ADDED : மார் 11, 2025 09:23 AM

நொய்டா; நொய்டாவில் ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
நொய்டாவில் இருப்பவர் ஜி.எஸ்.டி., கூடுதல் துணை கமிஷனர் சஞ்சய் சிங். வீட்டுவசதி சங்கத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் தமது குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று, தமது குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதிக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து, சஞ்சய் சிங் குடும்பத்தினர் எந்த ஒரு புகாரும் தர வில்லை. புகார் அளித்த பின்னர் அடுத்தக் கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரி சுமித் சுக்லா கூறுகையில், இறந்து போன சஞ்சய் சிங் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மனஉளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினர் கூறி உள்ளனர். அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறினார்.