ஒன்பதாவது ஆண்டில் ஜி.எஸ்.டி., : பிரதமர் பெருமிதம், ராகுல் வருத்தம்
ஒன்பதாவது ஆண்டில் ஜி.எஸ்.டி., : பிரதமர் பெருமிதம், ராகுல் வருத்தம்
ADDED : ஜூலை 01, 2025 05:37 PM

புதுடில்லி: ''  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான சக்தி வாய்ந்த இயந்திரமாக ஜி.எஸ்.டி., திகழ்கிறது'', என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேநேரத்தில் இந்த வரி  மக்களுக்கு எதிரானது என  லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி அறிமுகபடுத்தப்பட்டு  இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு செய்து, ஒன்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மறைமுக வரி விதிப்பு கட்டமைப்பை எளிமையாக்கி, பல்வேறு விதமான  வரி விதிப்புகளை ஒரேகுடையின் கீழ் ஜி.எஸ்.டி.,  கொண்டு வந்தது.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:அறிமுகம் செய்யப்பட்ட 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைத்த ஒரு மைல்கல் சீர்திருத்தமாக ஜி.எஸ்.டி., திகழ்கிறது. சிக்கல்களை குறைத்தன் மூலம், சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்தி உள்ளது.
இந்திய சந்தையை ஒருங்கிணைத்து மாநிலங்களை சம பங்காளிகளாக மாற்றியதுடன், உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியை வளர்க்கிறது.  பொருளாதார வளர்ச்சிக்கான சக்தி வாய்ந்த இயந்திரமாக ஜிஎஸ்டி திகழ்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்
 
8 ஆண்டுகள் முடிந்த நிலையில், ஜிஎஸ்டி என்பது வரி சீர்திருத்தம் அல்ல. இது  பொருளாதார அநீதிக்கான கொடூரமான கருவி,  கார்பரேட்டுக்கு ஆதரவானது. எழைகளை தண்டிக்கவும், சிறுகுறு நடுத்தர தொழில்களை நசுக்கவும், மாநிலங்களின் நிதி ஆதாரத்தை குறைக்கவும்,  பிரதமரின் கோடீஸ்வர நண்பர்கள் பலன் பெறவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.   சிறந்த மற்றும் எளிமையான வரி அளிப்பதாக உறுதி செய்யப்பட்டது. மாறாக, சிக்கலான மற்றும் ஐந்த அடுக்கு வரி முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. அதுவும் 900 முறை  திருத்தப்பட்டுள்ளது.
அதிகார குழப்பம் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. அதில் உள்ள ஓட்டையை அவர்களால் தாண்டி செல்ல முடியும். ஆனால், சிறுகுறு நடுத்தர மற்றும் சாதாரண வர்த்தகர்கள்  சிக்கலில் உள்ளனர். தினசரி துன்புறுத்தலுக்கு ஆதாரமாக ஜிஎஸ்டி போர்ட்டல் உள்ளது.
நாட்டில்பெரியஅளவில் வேலைவாய்ப்புகுளை உருவாக்கும் சிறுகுறு நடுத்தர தொழில் துறை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.
தேநீர் முதல், மருத்துவ சுகாதாரம் வரை குடிமக்கள் ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். ஆனால்,  கோடீஸ்வரர்கள்  ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடிவரை வரிச்சலுகை பெறுகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை வேண்டும் என்றே ஜிஎஸ்டி வரம்பில் இருந்து தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகள், போக்குவரத்து தொழிலில் உள்ளவர்கள், சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  பாஜ., ஆளாத மாநிலங்களை தண்டிக்கும்  கருவியாக ஜிஎஸ்டி  பாக்கி உள்ளது. இது மோடி அரசின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
இந்திய சந்தைகளை ஒற்றுமைபடுத்தவும், எளிமையான வரி விதிப்புக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்  தெளிவான கொள்கையாக  ஜிஎஸ்டி இருந்தது.   ஆனால்,   மோசமான முறையில் அமல்படுத்தியது, அரசியல் பாரபட்சம் ஆகியவை காரணமாக  அந்த வாக்குறுதி தோல்வி அடைந்துள்ளது.  மக்களே முதன்மை,  வணிகத்துக்கு ஏதுவாக ஜிஎஸ்டி கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

