sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பைக்குகள், கார்கள், உயிர்காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி குறைகிறது: முழு விபரம் இதோ

/

பைக்குகள், கார்கள், உயிர்காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி குறைகிறது: முழு விபரம் இதோ

பைக்குகள், கார்கள், உயிர்காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி குறைகிறது: முழு விபரம் இதோ

பைக்குகள், கார்கள், உயிர்காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி குறைகிறது: முழு விபரம் இதோ

8


UPDATED : செப் 03, 2025 11:20 PM

ADDED : செப் 03, 2025 11:03 PM

Google News

8

UPDATED : செப் 03, 2025 11:20 PM ADDED : செப் 03, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜிஎஸ்டியில் 4 வரி அடுக்குகளை 2 ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும் 18 சதவீத வரி அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஏற்கனவே இருந்த 12 மற்றும் 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கப்பட்டு உள்ளன.

ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக, பைக்குகள், கார்கள், மருத்துவ மற்றும் தனி நபர் காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டியும் குறைகிறது. இது அனைத்தும் வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் செய்யப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதன் பிறகு டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:வரி அடுக்குகளை குறைத்துள்ளோம். இனிமேல் இரண்டு அடுக்குகள் தான் இருக்கும். செஸ் வரி இழப்பீடு குறித்து ஆலோசித்து வருகிறோம். பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகளுக்கு ஊக்கமளிக்கும்.

அடுத்த தலைமுறை சீர்திருத்தத்துக்கு பிரதமர் மோடி குரல் கொடுத்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜிஎஸ்டி சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு பலனளிக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை, மருத்துவ துறைக்கு நல்ல பலன் கிடைக்கும். சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

வரி குறைக்கப்பட்ட பொருட்கள் விபரம்


5 சதவீதம் ஆக குறையும் பொருட்கள்ஹேர் ஆயில்கள், டாய்லட் சோப்கள், சோப் பார்கள், ஷாம்புக்கள், டூத் பேஸ்ட்கள், சைக்கிள்கள், மேஜை பாத்திரங்கள், அடுப்பு உபயோக பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள்

வரி இல்லாத பொருட்கள்

Ultra-high temperature milk, சென்னா, பனீர், இந்தியன் பிரட்கள், ரொட்டி ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி5 %ல் இருந்து பூஜ்ஜியமாக குறைப்பு

12, 18 % ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்

நொறுக்குத்தீனி, சாஸ், பாஸ்தா, இன்ஸ்டான்ட் நூடுல்ஸ், சாக்லேட், காபி, கார்ன்பிளேக்ஸ், வெண்ணெய், நெய்,பதப்படுத்தப்பட்ட இறைச்சி

5 சதவீதம் ஆக குறையும் பொருட்கள்

ஏசி, 32 இஞ்ச் டிவி, டிஸ்வாஷிங் மிஷின்கள், சிறிய கார்கள், 350சிசி இன்ஜீன் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள்

33 உயிர்காக்கும் மருந்துகள் மீதான 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி 0 ஆக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய், அரிய வகை நோய் மற்றும் நாள்பட்ட நோய்க்கான மருந்துகள் மீதான ஜிஎஸ்டி 5ல் இருந்து பூஜ்ஜியம் ஆகவும்

ஏராளமான மருந்துகள் மீதான ஜிஎஸ்டியும் 12ல் இருந்து 5 சதவீத வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.

பார்வையை சரி செய்யும் கண்ணாடிகள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பு

டிரக்குகள் , பஸ்கள், ஆம்புலன்ஸ்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாகவும்

ஆட்டோ உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி ஒரே மாதிரியாக 18 சதவீதமாக இருக்கும்.

3 சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாக இருக்கும்.

ஜவுளித்துறையை பொறுத்தவரை மனிர்களால் உருவாக்கப்பட்ட பைபர் மீதான ஜிஎஸ்டி 18 ல் இருந்து 5 சதவீதமாகவும்

சல்பியுரிக் ஆசிட், நைட்ரிக் ஆசிட் மற்றும் அமோனியா மீதான ஜிஎஸ்டி 18 ல் இருந்து 5 சதவீதமாக இருக்கும்.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட நூல் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாகவும் குறைப்பு

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான பாகங்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

டிராக்டர், விவசாயம், தோட்டக்கலை மற்றும் வனவியல் இயந்திரங்கள், அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள், உரம் தயாரிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12 ல் இருந்து 5 சதவீதமாக குறைகிறது

12 குறிப்பிட்ட பூச்சிக் கொல்லிகள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாகவும் குறைப்பு

கைவினைபொருட்கள், பளிங்கு, கிரானைட் , தோல் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவதம்

சிமென்ட் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 ஆகவும்

ஜிஎஸ்டியில் அனைத்து பொருட்களும் 18 மற்றும் 5 சதவீதத்தில் அடங்கும். சிறப்பு வகிதமாக 40 சதவீத வரி இருக்கும். இதில் ஆடம்பர பொருட்கள் அடங்கும். பான் மசாலா, சிகரெட், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் (புகையிலை, ஜர்தா, பீடி) ஆகியற்றுக்கு 40 சதவீத வரி இருக்கும்.

சர்க்கரை, இனிப்பு பொருள் அல்லது சுவையூட்டப்ப்டட காபின் கலந்த பானங்கள், கார்பனேட் ஏற்றப்பட்ட பானங்கள், பழச்சாறு கொண்ட கார்பனேற்றப்பட்ட பானங்கள் உள்ளிட்ட பொருட்களும் 40 சதவீதத்தின் கீழ் வரும்.

தனி நபர் மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,500க்கு கீழ் விலை கொண்ட காலணிகளுக்கு 5 சதவீதமும்

ரூ.2 ,500க்கு மேல் விலை கொண்ட காலணிகளுக்கு 18 சதவீதமும்

மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாகவும்

நடுத்தர மற்றும் பெரிய கார்கள், மோட்டார சைக்கிள்கள், ஹெலிகாப்டர்கள், தனிநபர்களுக்கான விமானங்கள், உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும்.






      Dinamalar
      Follow us