திருமணத்தில் விருந்தினர்கள் மோதல்:உ.பி.யில் 15 பேர் படுகாயம்
திருமணத்தில் விருந்தினர்கள் மோதல்:உ.பி.யில் 15 பேர் படுகாயம்
ADDED : நவ 03, 2025 07:38 PM

லக்னோ: உ.பி. மாநிலத்தில் திருமணத்தில் விருந்தினர்கள் மோதலில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரின் நாகினா பகுதியில் உள்ள பலாக் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நடைபெற்ற விருந்தில் சிக்கன் ப்ரை பரிமாறப்பட்டது. பரிமாறுவது தொடர்பாக மணமகன், மணமகள் தரப்பில் வந்திருந்த விருந்தினர்கள் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.அதாவது மணமகன் தரப்பில் தங்களுக்கு தரக்குறைவான சிக்கன் ப்ரை பரிமாறியதாக புகார் கூறினர்.
இந்த சம்பவத்தை அங்குள்ள ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவில்,விருந்தினர்கள் ஒருவருக்கொருவர் உதைத்து, குத்தி, நாற்காலிகளை வீசினர். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் வைரலானது.
இதனிடையே போலீசார் மற்றும் முஸ்லிம் மதகுருமார்கள் தலையிட்டு, நிலைமையை கட்டுப்படுத்தினர்.இந்த சம்பவத்தில் 15 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

