குஜராத் பள்ளியில் கொடூரம்: 8ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை
குஜராத் பள்ளியில் கொடூரம்: 8ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை
ADDED : ஆக 20, 2025 01:13 PM

ஆமதாபாத்: குஜராத்தில் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவரை, அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் செவன்த்-டே அட்வென்டிஸ்ட் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சீனியர், ஜூனியர் மாணவர்களுக்கு இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த முன்பகை காரணமாக, 8ம் வகுப்பு மாணவரை, அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தினார்.
காயம் அடைந்த 8ம் வகுப்பு மாணவரை பள்ளி ஆசிரியர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட மாணவரின் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியில் கூடினர்.
இதனால் பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கொலை செய்த 10ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர். சிறார் சட்டங்களில் கீழ், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க கோரி பெற்றோர்களும், ஹிந்து குழுக்களும் பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகத்திற்கு எதிராக புகார்களை அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.