ADDED : ஜூன் 07, 2025 09:38 PM
முசாபர்நகர்:சட்டவிரோத ஆயுதங்களை, 'டெலிவரி' செய்த ஹரியானா வாலிபர், உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலத்தின் பிரபல நிறுவனத்தில் டெலிவரி செய்பவராக பணிபுரிந்தவர் சுதான்ஷு, 23. சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை டில்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் டெலிவரி செய்து வந்துள்ளார்.
உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ராம்ராஜ் ஸ்டேஷன் போலீசார் நேற்று முன் தினம் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, சுதான்ஷுவின் பைக்கில் இருந்த பெரிய பையில் நடத்திய சோதனையில், 10 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டு சுதான்ஷு கைது செய்யப்பட்டார்.
அவருடன் மேலும் ஆறு பேர் இதேபோல துப்பாக்கி டெலிவரி செய்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. ஆறு பேரையும் போலீசார் தேடுகின்றனர்.
சுதான்ஷு மீது ஏற்கனவே, ஐந்து குற்ற வழக்குகள் நிலுவயில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.