உள்ளடக்கத்திற்கு செல்ல

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை; காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடி
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை; காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடி
UPDATED : நவ 18, 2026 12:22 PM
ADDED : நவ 18, 2026 07:15 AM

அ நிறம் | அளவு
-நமது நிருபர்-
ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
குல்காமில் பல தாக்குதல்களுடன் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த லத்தீப் பட் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். மசூதி அருகே பதுங்கி இருந்தவனை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
கடந்த நவம்பர் 16ல் லத்தீப் பட் கூட்டாளியான உமர் நிசார் தார் கொல்லப்பட்டான். மேலும் பங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.
