காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 ஜவான்கள் வீர மரணம்
காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 ஜவான்கள் வீர மரணம்
ADDED : செப் 13, 2024 11:28 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சண்டையில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
காஷ்மீரின் கீட்ஷ்வார் மாவட்டத்தில் சாட்ரோ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்தனர்.
இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வீரமரணம் அடைந்தவர்களில் விமன் குமார், அரவிந்த் சிங் என ராணும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று கத்துவா மாவட்டத்திலும் நடந்த பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரண்டு பயங்கரவாதிக்ள சுட்டுக்கொல்லப்பட்டன்ர்.

