உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 20, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி:அவுட்டர் டில்லி மாவட்டத்தில் உள்ள சுல்தான்புரியில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், வானத்தை நோக்கி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, 10:45 மணிக்கு, சுல்தான்புரியில் உள்ள மோமோஸ் ஸ்டால் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி, அந்த கடையை சூறையாடியது. தகவல் அறிந்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்ததும், வன்முறை கும்பல் தப்பியோடி விட்டது.
அப்படி ஓடும் போது, ஒரு நபர், தன் வசமிருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார். இதில், யாருக்கும் காயம் ஏற்படாவிட்டாலும், வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரித்து வருகின்றனர்.
