ADDED : நவ 24, 2024 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே அரக்குளம் பகுதியில் வசிப்பவர் ஈப்பச்சன் 59. ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அவரது வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக தொடுபுழா வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதிகாரி மனு கே.நாயர் தலைமையில் வனக்காவலர்கள் ஈப்பச்சன் வீட்டில் சோதனையிட்டனர். அதில் ஒரு பிஸ்டல் உட்பட மூன்று துப்பாக்கிகள், யானை பல் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவை கிடைத்தது எப்படி, பதுக்கியது ஏன் என ஈப்பச்சனிடம் விசாரிக்கின்றனர்.

