UPDATED : ஜூலை 11, 2025 12:35 PM
ADDED : ஜூலை 11, 2025 02:46 AM

புட்டபர்த்தி: புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா நிகழ்வு நேற்று நடந்தது.
குரு வந்தனம் தெய்வீக பாடலுடன் துவங்கிய நிகழ்வில், ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகளின் தலைவர் நிமிஷ் பாண்டியா மற்றும் உறுப்பினர் நாகானந்த் ஆகியோர் ஆன்மிக உரையாற்றினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், 'நான் ஒரு சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தன்' எனவும், பகவானின் போதனைகள் மற்றும் இந்தியாவின் ஆன்மிக வல்லமைகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து, 100 விவசாயிகளுக்கு, விவசாய உபகரணங்கள் வழங்கினார்.
கடந்த, 2024 ஜூன், 15ம் தேதி நடந்த கின்னஸ் சாதனை முயற்சியில், ஆன்லைனில் 11,000 பேர் சாய் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சாதனை படைத்தனர். குரு பூர்ணிமா நிகழ்வின் ஒரு பகுதியாக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
'மனிதர்களுக்குள் ஏற்படும் மன மாற்றம் ஒருவரின் மனிதாபிமானம் மற்றும் மனித மதிப்புகளுக்கு எவ்வளவு முக்கியம்' என ஸ்ரீ சத்ய சாய், கடந்த 2001ம் ஆண்டு ஜூலை, 4ம் தேதி போதித்ததை நினைவுகூறும் வகையில் இந்த குரு பூர்ணிமா நிகழ்வு அமைந்தது.