தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வாரணாசியில் பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார்; ராகுல்

வாரணாசியில் பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார்; ராகுல்

வாரணாசியில் பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார்; ராகுல்


UPDATED : ஜூன் 11, 2024 08:34 PM

ADDED : ஜூன் 11, 2024 08:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2024 08:34 PM ADDED : ஜூன் 11, 2024 08:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரேபரேலி: வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார் என காங்., எம்.பி.ராகுல் தெரிவித்தார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உபி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கே,எல். ஷர்மா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து ராகுல், பிரியங்கா ஆகியோர் இன்று ரேபரேலி, அமேதி தொகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.

ரேபரேலி தொகுதி காங். எம்.பியான ராகுல் கூறியது, கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் 2024 தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் குறைந்த ஓட்டில் வெற்றி பெற்றுள்ளார்.

இத்தொகுதியில் மோடியை எதிர்த்து எனது தங்கை பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி நிச்சயம் தோல்வி அடைந்திருப்பார். பிரியங்கா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மோடியை வீழ்த்தியிருப்பார் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us