தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சட்டவிரோத சொகுசு விடுதிகளை அகற்ற ஹம்பி வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ்

சட்டவிரோத சொகுசு விடுதிகளை அகற்ற ஹம்பி வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ்

சட்டவிரோத சொகுசு விடுதிகளை அகற்ற ஹம்பி வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ்


ADDED : பிப் 01, 2024 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயநகரா: ஹம்பியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகளை அகற்றும்படி, ஹம்பி வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜயநகரா, ஹொஸ்பேட்டில் உள்ள ஹம்பி, வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். உலக பாரம்பரிய பகுதிகளின் பட்டியலில், ஹம்பியும் சேர்ந்துள்ளது.

கொப்பால், கங்காவதியின், 15 கிராமங்கள் ஹம்பி வளர்ச்சி ஆணையத்தின் எல்லைக்குள் வருகின்றன.

கிராமங்களில் எந்த கட்டடம் கட்ட வேண்டுமானால், ஹம்பி ஆணையத்தின் அனுமதி கட்டாயம். ஆனால் சானாபுரா, ஹனுமனஹள்ளி, சிக்கராம்புரா, ஆனேகுந்தி உட்பட, பல்வேறு கிராமங்களில், ஆணையத்தின் அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக சொகுசு விடுதிகள் கட்டி, வர்த்தக செயல்பாடுகள் நடக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, விருபாபுராகுட்டே, சானாபுரா, ஆனேகுந்தி பகுதிகளில், சட்ட விரோத சொகுசு விடுதிகள் கட்டப்பட்டது குறித்து, நீதிமன்றத்தில் சிலர் முறையிட்டனர்.

விசாரணை நடத்திய நீதிமன்றம், சட்டவிரோத சொகுசு விடுதிகளை அகற்றும்படி உத்தரவிட்டது. அதன்படி அன்றைய மாவட்ட நிர்வாகம், தாலுகா நிர்வாகம் ஆகியவை விடுதிகளை இடித்துத் தள்ளின.

இரண்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சட்டவிரோத சொகுசு விடுதிகள் தலை துாக்கின.

சிலர் நீதிமன்ற உத்தரவை அவமதித்து, சொகுசு விடுதி கட்டியதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி, 2023 ஜூன் 19ல் மற்றும் 20ல், ஹம்பி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள், அனைத்து விடுதிகளையும் மூடினர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், மூடப்பட்ட சொகுசு விடுதிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக, ஹம்பி வளர்ச்சி ஆணையத்துக்கு புகார் வந்தது. எனவே சொகுசு விடுதிகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆணையம், விடுதிகளை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us