ADDED : ஜன 19, 2024 12:44 AM
ஹாவேரி : ஹாவேரி ஹனகல் நல்கர் கிராசில் உள்ள லாட்ஜில், கடந்த 8ம் தேதி முஸ்லிம் பெண், வேறு மதத்தை சேர்ந்த ஆண் நண்பருடன் தங்கி இருந்தார். இதனால் அந்த பெண்ணை, அவர் சார்ந்த சமூக வாலிபர்கள் தாக்கினர்.
காரில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து விசாரித்து வரும் ஹனகல் போலீசார், எட்டு பேரை கைது செய்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய, மேலும் இருவர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் அவர்கள் அக்கியலுாரை சேர்ந்த, மீன் வியாபாரி இப்ராஹிம் காதர் கவுஸ், 27, கார் டிரைவரான தவுசிப் அகமது, 25 என்பது தெரிந்தது.
இவர்கள் கைது செய்தது மூலம், இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத்திற்கு, கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகன் அறிக்கை தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

