சீன மொழியில் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து: பா.ஜ., கிண்டல்
சீன மொழியில் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து: பா.ஜ., கிண்டல்
ADDED : மார் 01, 2024 01:13 PM

சென்னை: சீன ராக்கெட் உடன் தி.மு.க., அமைச்சர் விளம்பரம் வெளியிட்டதை கிண்டல் செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் தமிழக பா.ஜ., பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
கடந்த பிப்.,28ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக திமுக அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். அதில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பின்னணியில் சீன நாட்டின் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி, திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இதனை குறிப்பிட்டு திமுக.,வின் தேசப்பற்று இதுதான் என கடுமையாக விமர்சித்திருந்தார்.


