சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல; பாதுகாப்பு கவசம்: ராகுல்
சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல; பாதுகாப்பு கவசம்: ராகுல்
ADDED : ஆக 15, 2024 10:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது நமது மிக பெரிய பாதுகாப்பு கவசம்' என காங்கிரஸ் எம்.பியும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.
டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிலையில், சமூக வலை தளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
உண்மை
எங்களைப் பொறுத்தவரை, சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது நமது மிக பெரிய பாதுகாப்பு கவசம். இது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்குள் பிணைக்கப்பட்டுள்ளது. இது தான் உண்மையைப் பேசும் திறன் மற்றும் கனவுகளை நிறைவேற்றும் நம்பிக்கை. ஜெய் ஹிந்த். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.