ADDED : மார் 19, 2024 10:23 PM
சண்டிகர்:ஹரியானா அமைச்சரவை நேற்று விரிவாக் கம் செய்யப்பட்டது. மேலும், 8 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
ஹரியானா மாநிலத்தில், 2019ல் நடந்த சட்ட சபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 47 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது.
இதையடுத்து, ஜே.ஜே.பி., மற்றும் சுயேச்சை ஆதரவுடன் பா.ஜ.,வைச் சேர்ந்த மனோகர்லால்கட்டார் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. கடந்த 11ம் தேதி முதல்வர் மனோகர்லால் கட்டார், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, சுயேச்சை மற்றும் உதிரிக்கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.,வைச் சேர்ந்த நயாப் சிங் சைனி தலை மையிலான புதிய அரசுகடந்த 12ம் தேதி பதவியேற்றது. அன்று, முதல்வர் சைனியுடன்5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கமல் குப்தா, சீமா திரிகா, மஹிபால் தண்டா, அசீம் கோயல், அபய்சிங் யாதவ், சுபாஷ் சுதா, பிஷம்பர் சிங் பால்மிகி, சஞ்சய் சிங் ஆகிய8 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில்,8 பேருக்கும் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர்மனோகர் லால் கட்டாரும் பங்கேற்றார்.

