காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு: ரூ.5 கோடி ரொக்கம், மதுபானம் பறிமுதல்
காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு: ரூ.5 கோடி ரொக்கம், மதுபானம் பறிமுதல்
UPDATED : ஜன 05, 2024 05:29 PM
ADDED : ஜன 05, 2024 05:18 PM

சண்டிகர்: சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக ஹரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டில் ரூ.5 கோடி ரொக்கம், 100 பாட்டில் மதுபானம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
யமுனா நகர் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கிராவல், மண், ஜல்லி ஆகியவற்றை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக சட்டவிரோத சுரங்கம் தொடர்பான வழக்கில் ஹரியானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுரேந்தர் பன்வர், இந்திய தேசிய லோக்தள கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., தில்பாக் சிங் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீது ஹரியானா போலீசார் ஏராளமான வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் கடந்த 2013ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுரேந்தர் பன்வர் மற்றும் தில்பாக் சிங் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் நேற்று முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், இருவரது இடங்களிலும் ரூ.5 கோடி ரொக்கம்,100 மதுபாட்டில்கள், சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள், 300 கேட்ரிட்ஜ்கள், 4 முதல் 5 கிலோ தங்க பிஸ்கட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.