ஹரியானா தேர்தல்: மிகவும் பணக்கார பா.ஜ. ,வேட்பாளர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஹரியானா தேர்தல்: மிகவும் பணக்கார பா.ஜ. ,வேட்பாளர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
UPDATED : செப் 13, 2024 09:27 PM
ADDED : செப் 13, 2024 09:15 PM

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் மிகவும் பணக்கார வேட்பாளராக பா.ஜ.வை சேர்ந்த கேப்டன் அபிமன்யூ ரூ. 417 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை தாக்கல் செய்தார்.
90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அக். 05-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ., காங்., ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.இந்நிலையில் இம்மாநில நாராணவுட் தொகுதி பா.ஜ,.,வேட்பாளராக முன்னாள் நிதி அமைச்சர் கேப்டன் அபிமன்யூ என்பவர் போட்டியிடுகிறார்.
அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வங்கியில் தனக்கு அசையும் சொத்தாக பல்வேறு முதலீடாக ரூ. 16 கோடியும் ,தன் மனைவிக்கு ரூ. 369 கோடியில் அசையா சொத்துக்களும், ரூ. 47.93 கோடி அசையும் சொத்துக்களும் என ரூ. 417 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இம்மாநிலத்தில் மிகவும் பணக்கார வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

