sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹரியானாவில் போலீசாரின் பணி எப்படி உள்ளது? க்யூஆர் கோடு மூலம் மக்களே மதிப்பீடு செய்யும் நடைமுறை அறிமுகம்

/

ஹரியானாவில் போலீசாரின் பணி எப்படி உள்ளது? க்யூஆர் கோடு மூலம் மக்களே மதிப்பீடு செய்யும் நடைமுறை அறிமுகம்

ஹரியானாவில் போலீசாரின் பணி எப்படி உள்ளது? க்யூஆர் கோடு மூலம் மக்களே மதிப்பீடு செய்யும் நடைமுறை அறிமுகம்

ஹரியானாவில் போலீசாரின் பணி எப்படி உள்ளது? க்யூஆர் கோடு மூலம் மக்களே மதிப்பீடு செய்யும் நடைமுறை அறிமுகம்


ADDED : நவ 02, 2025 08:42 PM

Google News

ADDED : நவ 02, 2025 08:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்; ஹரியானாவில் போலீசாரின் பணி எப்படி உள்ளது என்பதை மக்கள் க்யூஆர் கோடு மூலம் மதிப்பீடு செய்யும் வித்தியாசமான நடைமுறை ரோஹ்தக் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

காவல்துறை என்றாலே மரியாதை கலந்த பயம் அல்லது பயந்தபடியே மரியாதை தருவது என்ற பொதுவான கருத்து சமூகத்தில் பெரும்பான்மையோருக்கு உண்டு. புகார்தாரர்களிடம் போலீசார் நடந்து கொள்ளும் விதமே இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளது.

இந் நிலையில் ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் எவ்வாறு பணி செய்கின்றனர்? எப்படி போலீஸ் ஸ்டேஷனில் நடத்துகின்றனர் என்பதை மக்களே மதிப்பீடு செய்யும் க்யூஆர் கோடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு, க்யூஆர் கோடு முறை வழங்கப்படும். செல்போனில் அதை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர், தாங்கள் எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு என்ன பிரச்னையாக சென்றீர்கள்? கொலை, கொள்ளை, மோசடி என எந்த வகையான புகார்களை யாரிடம் அளித்தீர்கள்? அதை பெற்றுக் கொண்டவர் பெயர் என்ன? புகார் அளித்த தேதி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் டிஜிட்டல் முறையில் ஒரு விண்ணப்பம் அளிக்கப்படும். அந்த விண்ணப்பத்தில் 12 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். அதில் 11 கேள்விகள் போலீசார் பற்றிய மதிப்பீட்டை அளவிடுவதாக இருக்கும். 12வது கேள்வி பொதுமக்கள் ஏதேனும் கருத்துகள் அல்லது பரிந்துரைகள் கூறுவதாக இருந்தால் தெரிவிக்கலாம்.

மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெறவே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறுகிறார் மாவட்ட எஸ்பி., சுரேந்தர் சிங் போரியா. அவர் மேலும் கூறியதாவது;

இந்த க்யூஆர் கோடு நடைமுறையானது, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் கொண்டு வரப்பட்டு உள்ளது. போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அங்குள்ளோர் உங்களை எப்படி எதிர்கொண்டனர்? அதிகாரிகள் தன்மையாக விசாரித்தார்களா? நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் இருந்ததா? என்பதை 1 முதல் 5 என்ற மார்க்கின் (உதாரணமாக மோசம், பரவாயில்லை, சிறப்பு என) அடிப்படையில் ரேட்டிங்காக அளிக்கலாம்.

புகார்தாரர்கள் தங்கள் அனுபவம், பரிந்துரைகளை சமர்ப்பித்த பின்னர், இவை அனைத்தும் எஸ்பி அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். புகார்தாரர்கள் கூறியது அனைத்தும் உண்மை தானா என சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து மேலதிகாரிகள் கேட்பர். காவல்துறை பற்றி மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவும், ஒரு வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும் இந்த நடைமுறை ஒரு தொடக்கமாக இருக்கும்.

இவ்வாறு எஸ்பி., சுரேந்தர் சிங் போரியா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us