பன்னீர்செல்வத்துக்கு வசதி இருந்தும் வக்கீல் இருந்தும் வழக்காடும் வாய்ப்பு தீர்ந்ததா?
பன்னீர்செல்வத்துக்கு வசதி இருந்தும் வக்கீல் இருந்தும் வழக்காடும் வாய்ப்பு தீர்ந்ததா?
UPDATED : மார் 20, 2024 09:02 AM
ADDED : மார் 20, 2024 09:01 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா தேர்தலில் அதிமுக.,வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால், ஓபிஎஸ் அதிமுக.,வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த நிரந்தரமாக தடை விதித்தது. இது ஓபிஎஸ்., தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக 'பன்னீர்செல்வத்துக்கு வசதி இருந்தும் வக்கீல் இருந்தும் வழக்காடும் வாய்ப்பு தீர்ந்ததா?' என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

