ADDED : ஜன 01, 2025 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அதுல் சுபாஷ், 34. பெங்களூரு மாரத்தஹள்ளியில் தனியார் நிறுவன அதிகாரி. மனைவி நிகிதா, மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக் தொல்லை கொடுப்பதாக, 90 நிமிட வீடியோ பேசிவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை தேசிய அளவில் எதிரொலித்தது. ஆண்களுக்கு பாதுகாப்பு தரும் அமைப்பு உருவாக்க வேண்டும் என்ற, 'ஹேஷ்டேக்' உருவானது. நிகிதா, நிஷா, அனுராக் கைது செய்யப்பட்டனர்.

