ADDED : அக் 05, 2024 11:43 PM

கட்சியினர் அனைவரும் மக்களை சந்தித்து ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துக் கூறுங்கள். லோக்சபா தேர்தலில் பீஹாரில், நம் தே.ஜ., கூட்டணி 40ல் 30 இடங்களை கைப்பற்றியது உற்சாகம் தந்தது. அதே போல் சட்டசபை தேர்தலில், 200 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும்.
நிதீஷ் குமார், பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்
சீர்குலைக்க முயற்சிக்கிறார்!
பொது கணக்கு குழு தலைவராக இருக்கும் காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால், அரசியல் நோக்குடன் செயல்படுகிறார். ஹிண்டன்பர்க் நிறுவனத்தால் செபி தலைவர் மீது கூறப்பட்ட உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளை வைத்து அரசையும், நாட்டின் பொருளாதார, நிதி கட்டமைப்பையும் சீர்குலைக்க முயற்சிக்கிறார்.
நிஷிகாந்த் துபே, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,,
சேவை மனப்பான்மை!
பிரதமர் மோடி தலைமையில், கடந்த 10 ஆண்டுகளாக சேவை மனப்பான்மை மற்றும் கடும் உழைப்பை அடிப்படையாக வைத்து பா.ஜ., செயல்படுகிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். இதன் காரணமாக, ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்கும்.
ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அமைச்சர், பா.ஜ.,