திருப்பதியில் இருந்து ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.48.20 லட்சம் பறிமுதல்
திருப்பதியில் இருந்து ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.48.20 லட்சம் பறிமுதல்
ADDED : மே 24, 2025 07:44 PM

பாலக்காடு:திருப்பதியில் இருந்து மலப்புரத்துக்கு ரயிலில் கடத்தி வந்த, ஹவாலா பணம், 48.20 லட்சம் ரூபாயை, பாலக்காடு ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., தீபக் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, கோவை பகுதியில் இருந்து வந்த சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் சந்தேகப்படும் வகையில் இருந்த பயணியின் பேக்கை சோதனையிட்டனர். அதில் எவ்வித ஆவணமும் இன்று, ஹவாலா பணம், 48.20 லட்சம் ரூபாய் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, நடத்திய விசாரணையில், அவர் மகாராஷ்டிரா மாநிலம், சங்கிலி போர்கி பகுதியை சேர்ந்த மதபசாப், 20, என்பதும், திருப்பதியில் இருந்து மலப்புரம் மாவட்டம் வளாச்சேரிக்கு பணத்தை கடத்தி செல்வதும் தெரியவந்தது.
பறிமுதல் செய்த பணத்தையும், கைது செய்யப்பட்ட மதபசாப்பையும் தொடர் விசாரணைக்காக, வருமான வரித்துறையினரிடம் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஒப்படைத்தனர்.