ADDED : ஆக 18, 2011 05:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவிற்கு, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் அப்துல் பாரி சித்திக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பீகார் மாநிலத்தில், தற்போது நிதீஷ்குமார் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் ஊழல்கள் பெருமளவில் மலிந்துள்ளன. இதனால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், தாங்களும், தங்களது குழுவும், பீகார் மாநிலத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒன்றை அமைத்து போராட வேண்டும் என்று அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.