தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சொத்துரிமை விண்ணப்பத்தை 2 மாதத்தில் பரிசீலிக்க டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சொத்துரிமை விண்ணப்பத்தை 2 மாதத்தில் பரிசீலிக்க டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சொத்துரிமை விண்ணப்பத்தை 2 மாதத்தில் பரிசீலிக்க டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: குத்தகையில் இருக்கும் வீட்டுக்கு சொத்துரிமை வழங்கும் விண்ணப்பத்தை, இரண்டு மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க, டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், தவணைத் தொகை அனைத்தையும் செலுத்தும் வரை அந்த வீடு, குத்தகை உரிமையில் வழங்கப்படுகிறது. தவணைத் தொகையை செலுத்திய பின், வீட்டை அதன் குடியிருப்பாளருக்கு முழு சொத்துரிமையாக மாற்றித் தர வேண்டும்.

ஆனால், ஏராளமான குடியிருப்பாளர்கள், தங்களுடைய குத்தகை தவணைத் தொகை முழுவதையும் செலுத்தி, சொத்துரிமை கோரி விண்ணப்பித்தும் அவை நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக, டில்லி மேம்பாட்டு ஆணைய வீடுகளில் குடியிருப்போர் சார்பில் தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதிபா எம்.சிங் மற்றும் விகாஸ் மஹாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

‘குத்தகை உரிமையிலிருந்து முழு சொத்துரிமை வழங்குவதற்கான கொள்கையை இறுதி செய்ய, நான்கு மாதங்கள் அவகாசம் வேண்டும்’ என, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலர் தெரிவித்தார். ‘குறைந்தபட்சமாக இரண்டு மாதங்களாவது அவகாசம் வழங்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

செயலரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

டில்லி மேம்பாட்டு ஆணைய வீடுகளில் குடியிருப்போர், சொத்துரிமை கோரி சமர்ப்பித்துள்ள விண்ணப்பங்களை, தற்போது நடைமுறையில் உள்ள கொள்கை அடிப்படையில், இரண்டு மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். அதேநேரத்தில், எதிர்காலத்தில் இந்த விண்ணங்களை விரைவாக பரிசீலிக்க, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணையம் ஆகியவை ஒரு புதிய கொள்கையை உருவாக்கலாம்.

குத்தகை உரிமையிலிருந்து முழு சொத்துரிமைக்கு வீட்டை மாற்றித் தருவதன் முக்கியத்துவத்தையும், இதனால் டில்லிவாசிகள் எதிர்கொள்ளும் பெரும் சிரமங்களையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியுள்ளது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து அப்போதைய நடைமுறையில் இருந்த மாற்றுக் கட்டணத்தைச் செலுத்தியும், டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.

அவகாசம் அளித்தால் இந்த விவகாரத்தில் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி வரை விசாரணையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், ஒரு முழு ஆண்டுக்கும், டில்லி நகரம் முழுதும் சொத்துக்களை மாற்றும் பணி முடங்கிக் கிடக்கும். இந்த விவகாரத்தை ஆராய்ந்து கொள்கை உருவாக்க, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு ஏற்கனவே போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், டில்லி மேம்பாட்டு ஆணையத்தின், ‘இட்லி’ இணையதளமும் செயல்பாடு இன்றி முடங்கிக் கிடக்கிறது. ஜனவரி 2ம் தேதி முதல் இந்த இணையதளம் முடங்கிக் கிடப்பதால், சொத்து உரிமையாளர்களால் நில உரிமை மாற்றத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை.

அதேநேரத்தில், 2020 மற்றும் 2026ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட 1,373 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ஆனால், சொத்து உரிமை மாற்றத்துக்கான கட்டணமாக, 155.06 கோடி ரூபாயை, டில்லி மேம்பாட்டு ஆணையம் வசூலித்துள்ளது. இவற்றில், 308- விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், சொத்து உரிமை மாற்றப் பத்திரங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் அடுத்த விசாரணை டிசம்பர் 11-ம் தேதி நடத்தப்படும். அன்று நடைபெறும் விசாரணையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலர் மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us