டி - 20 மகளிர் கிரிக்கெட் ஹெச்.சி.எல்., அணி வெற்றி
டி - 20 மகளிர் கிரிக்கெட் ஹெச்.சி.எல்., அணி வெற்றி
ADDED : அக் 03, 2025 12:54 AM
சென்னை, மகளிருக்கான டி - 20 கிரிக்கெட் போட்டியில், ஹெச்.சி.எல்., ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் ஜெபாஸ் அணியை தோற்கடித்தது.
குருநானக் கல்லுாரியின் நான்காவது சீசன், பி.என்.தவான் நினைவு கோப்பைக்கான 'டி - 20' பெண்கள் கிரிக்கெட் போட்டிகள், வேளச்சேரியில் நடக்கின்றன. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில், டபிள்யூ.சி.சி., அணி, 15 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 114 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த ராணிமேரி கல்லுாரி, 15 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 57 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.
நேற்று காலை நடந்த போட்டியில், ஹெச்.சி.எல்., ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து, 165 ரன்களை அடித்தது.
அடுத்து விளையாடிய ஜெபாஸ் அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, எட்டு விக்கெட்டுகளை இழந்து, 89 ரன்கள் மட்டுமே அடித்து, 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.