ADDED : அக் 25, 2024 07:52 AM
ஆனேக்கல்: யானையை குளிப்பாட்ட சென்ற இளைஞர், ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.
மைசூரின் ஹுன்சூரை சேர்ந்தவர் கோபால், 20. பெங்களூரு ரூரல், ஆனேக்கல்லின், பன்னரகட்டா உயிரியல் பூங்காவின், யானைகள் முகாமில் உள்ள சம்பத் என்ற 10 வயது யானையை பராமரிக்கும் பணியை செய்து வருகிறார்.
இவர் நேற்று காலை, யானையை குளிப்பாட்ட, சீகேகட்டே அருகில் உள்ள ஏரிக்கு அழைத்து சென்றார். கரையில் யானையை நிறுத்தி, அதன் மீது அமர்ந்த படி குளிப்பாட்டுவதில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது யானை திடீரென, ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றது. அப்போது யானை மீது அமர்ந்திருந்த கோபால், நிலை தடுமாறி நீரில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கினார். இதை பார்த்த அவரது அண்ணன் கிருஷ்ண குமார், பாகன் சஞ்சித், கோபாலை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், அதற்குள் அவர் நீரில் மூழ்கிவிட்டார்.
இதையறிந்த பூங்கா ஊழியர்கள், பன்னரகட்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் கோபாலின் உடலை வெளியே எடுத்தனர். பன்னரகட்டா போலீசார் விசாரிக்கின்றனர்.
....புல் அவுட்....
எதிர்பாராமல் இச்சம்பவம் நடந்துள்ளது. வரும் நாட்களில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல், எச்சரிக்கையாக இருப்போம். யானைகளை குளிப்பாட்ட தொட்டி கட்டப்படும்.
- சூர்யசென், செயல் நிர்வாகி, பன்னரகட்டா பூங்கா
***

