ADDED : ஏப் 05, 2025 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லியில் வெப்பநிலை நேற்று, 35.7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட, 1.7 டிகிரி அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 47 சதவீதமாக இருந்தது.
இன்று வெப்பநிலை 39 டிகிரி பதிவாகும் என கணித்துள்ள வானிலை நிபுணர்கள் அடுத்த ஆறு நாட்களுக்கு டில்லியில் வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ளனர். அதிகபட்சமாக 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் தரக்குறியீடு நேற்று மாலை 6:00 மணிக்கு 161ஆக பதிவாகி மிதமான நிலையில் இருந்தது.

