வெப்ப அலை: உ.பி.யில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு
வெப்ப அலை: உ.பி.யில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு
UPDATED : மே 31, 2024 07:47 PM
ADDED : மே 31, 2024 07:05 PM

லக்னோ: கடுமையான வெப்ப அலை தாக்கியதால் உ.பி. மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். வெப்ப அலை தாக்கியதில் 6 பாதுகாப்பு படை வீரர்களின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரித்ததால் அவர்கள் உயிரிழந்தனர்.
பீஹாரில் உயிரிழப்பு 20 ஆக உயர்வு
வட மாநிலங்களை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயில் தொடர்பான சம்பவங்களில் பீஹாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
பீஹாரில், அதிகபட்சமாக வெப்பநிலை 48.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அவுரங்காபாத்தில் பதிவானது. இதனால், மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என பலர் அவதியடைந்து வருகின்றனர். ஷேக்புரா பகுதியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மயக்கமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, மாநிலத்தில் வெப்பம் தாங்க முடியாமல் அவுரங்காபாத்தில் 13 பேரும், கைமூர் மாவட்டத்தில் 4 பேரும், போஜ்பூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 132.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியதால் மக்கள் தவித்தனர்.