ADDED : மார் 16, 2025 11:39 PM
பெங்களூரு,: 'நாளை முதல் 20ம் தேதி வரை மாநிலத்தின் வட மாவட்டங்களின் உட்பகுதியில் வெப்பத்தின் அளவு 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸும், அடுத்த ஐந்து நாட்களுக்கு தென் மாவட்டங்களின் உட்பகுதில் 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்' என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
பாகல்கோட், பீதர், கலபுரகி, ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீச உள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வீட்டில் இருந்து வெளியே செல்வோர், முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் மூன்று டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும்.
தட்சிண கன்னடா, மைசூரு, ஹாசன், குடகு மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.