டில்லியில் கடும் பனிமூட்டம்; 200 விமானங்கள் தாமதம்
டில்லியில் கடும் பனிமூட்டம்; 200 விமானங்கள் தாமதம்
ADDED : ஜன 04, 2025 01:01 AM

புதுடில்லி: டில்லியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரண மாக நேற்று விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
வடமாநிலங்களின் பல பகுதிகளில் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. டில்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்ஷியஸ், குறைந்தபட்சம் 7 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவானது.
டில்லியில் விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில், 100 அடிக்கு அப்பால் உள்ள எதுவும் தெரியாத அளவுக்கு பனி கொட்டியது.
காற்றில் நிலவிய ஈரப்பதம் காரணமாக காற்றின் தரக்குறியீடும் 300 என்ற மோசமான நிலையை எட்டியது.
விமான நிலைய ஓடுபாதை தெரியாததால், இண்டிகோ, ஏர் இந்தியா உட்பட 200 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியது. இதே போல் டில்லியில் இருந்து புறப்பட வேண்டிய 24 ரயில்கள் மூடுபனியால் நேற்று நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
டில்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 8ம் தேதி வரை மூடுபனி நிலவும் என, வானிலை மையம் கணித்துள்ளது.
ஹிமாச்சல், லடாக்கில் பனிப்பொழிவுடன், லேசான மழைப்பொழிவும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.
உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தா நகர் மாவட்ட கலெக்டர், 'கடும் குளிர் காரணமாக எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், மறு அறிவிப்பு வரும் வரையில் பள்ளிக்கு வர தேவையில்லை' என உத்தரவிட்டுள்ளார்.