UPDATED : செப் 09, 2011 01:15 PM
ADDED : செப் 09, 2011 01:00 PM
புதுடில்லி: டில்லியில் கனமழை பெய்துவருகிறது.
இதனால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது. டில்லியின் முக்கிய பகுதிகளான அக்சர்தம், டிபென்ஸ் காலனி, ஜங்புரா உள்ளிட்ட மத்திய டில்லி பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு பெய்ய துவங்கியது. 5 மணி நேரத்தில் 36 மி.மீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தகன மழையால் அதிகாலையில் பள்ளி மற்றும் பணிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இதே போன்று ரயில்பவன், விகாஸ் மார்க், மாயாபுரி, நாரினா சாலை,மகாராணிபேகஹ், கோவிந்தாபுரி ஆகிய பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இந்த கனமழையால் மேரிலாபகுதியில் சுவர்இடிந்துவிழந்ததில் சிறுமி பலியானார்.