டில்லியில் அதிகாலையில் வெளுத்து வாங்கிய கனமழை; மிதந்து செல்லும் வாகனங்கள்
டில்லியில் அதிகாலையில் வெளுத்து வாங்கிய கனமழை; மிதந்து செல்லும் வாகனங்கள்
ADDED : மே 02, 2025 06:54 AM

புதுடில்லி: தலைநகர் டில்லி இன்று அதிகாலையில் திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இடைவிடாது பெய்த இந்த கனமழையால், டில்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம், குளம்போல தேங்கியுள்ளது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மிதந்தபடி, மெதுவாக செல்கின்றன.
குறிப்பாக, புழுதி காற்று காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் தாமதமாகவும், சில விமானங்கள் வேறு பகுதிகளுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளன.
பயணிகள் தங்களின் பயணத்திற்கு முன்பாக, விமான சேவைகளின் விபரங்களை அறிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

