ADDED : செப் 04, 2025 12:21 AM
திருவனந்தபுரம்:கேரளாவில் ஓணம் பண்டிகை களை கட்டியுள்ள நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கேரள மாநிலம் களை கட்டியுள்ளது. பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் வருவதால் மாநிலம் முழுவதும் உள்ள ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.