ADDED : ஜூலை 18, 2025 02:39 AM
மூணாறு:கேரளாவில் ஜூலை 21 வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜூலை 21 வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.
ரெட் அலர்ட்: இன்று வயநாடு, கண்ணுார், காசர்கோடு, நாளை கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு. ஜூலை 20ல் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு அதி தீவிர கன மழைக்கான ' ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்: இன்று இடுக்கி,மலப்புரம்,கோழிக்கோடு, நாளை இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், ஜூலை 20ல் இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, ஜூலை 21ல் கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
எல்லோ அலர்ட்: இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு. நாளை பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம். ஜூலை 20ல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம்.
ஜூலை 21ல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204.4 மி.மீட்டருக்கு அதிகமாகவும், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 115.6 முதல் 204.4 மி.மீ., வரை, எல்லோ அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 64.5 முதல் 115.5 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.