தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ உ.பி., கனமழைக்கு ஒன்பது பேர் பலி

உ.பி., கனமழைக்கு ஒன்பது பேர் பலி

உ.பி., கனமழைக்கு ஒன்பது பேர் பலி


UPDATED : ஆக 06, 2026 09:36 PM

ADDED : ஆக 06, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 09:36 PM ADDED : ஆக 06, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லக்னோ:உத்தர பிரதேசத்தில் பெய்த பலத்த மழையால் மூன்று வெவ்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உட்பட ஒன்பது பேர் பலியாகினர்.

உ.பி.,யின் லக்னோ உட்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. இந்நிலையில பிரதாப்கர் நகரில் உள்ள முகுலி பஜாரில் நுாறு ஆண்டு பழமையான வீட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் நேற்று அதிகாலை துாங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வீடு இடிந்ததில் 2 வயது மற்றும் 10 மாத குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். குழந்தைகளின் தந்தை அமன் இடிபாடுகளில் இருந்து தப்பி உயிர்பிழைத்தார்.

இதேபோல் பாரபங்கி மாவட்டத்தின் அலியாபாத் கிராமத்தில், முறையே 14 மற்றும் 7 வயதான அக்கா, தம்பி உட்பட ஐந்து பேர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அருகே இருந்த செங்கற்களால் ஆன பழைய சுவர் இடிந்து விழுந்ததில் அக்கா, தம்பி இருவரும் உயிரிழந்தனர். மூவர் காயம் அடைந்தனர்.

இதேபோல் சஹரான்பூர் மாவட்டம் காகேரி கிராமத்தில் 35 வயது பெண் ஒருவர் மண்குடிசை இடிந்து விழுந்ததில் பலியானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us