தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்தது கனமழை: அடுத்தடுத்து நிலச்சரிவு; பஸ், ரயில் சேவை பாதிப்பு

 மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்தது கனமழை: அடுத்தடுத்து நிலச்சரிவு; பஸ், ரயில் சேவை பாதிப்பு

 மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்தது கனமழை: அடுத்தடுத்து நிலச்சரிவு; பஸ், ரயில் சேவை பாதிப்பு


ADDED : ஜூலை 07, 2026 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 02:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: மஹாராஷ்டிராவில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, மஹாராஷ்டிராவின் மும்பை, தானே, ராய்கட், பால்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மும்பை மற்றும் தானேவில் கடந்த 4ம் தேதி இரவு தொடங்கிய கனமழை நேற்று காலை வரை நீடித்தது.

இதனால், மும்பையில் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறியதால், பஸ் போக்குவரத்து கடு மையாக பாதிக்கப்பட்டது; குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால், மக்கள் அவதி அடைந்தனர்.

நடு வழியில் நிறுத்தம்


மும்பை - புனே நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் வழிந்தோடுவதால், சுற்றியுள்ள நகரங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மும்பை புறநகர் பகுதி களான வசாய் - விரார், நல்லாசோராவும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

புனே மாவட்டத்தில், கோரவாடி ரயில் நிலையம் அருகே தேங்கிய மழைநீரில் தனியார் பஸ் ஒன்று நேற்று சிக்கியது. அதிலிருந்த 37 பயணியரும் மீட்பு படையினரால் மீட்கப்பட்டனர்.

கர்ஜத் - லோனாவாலா இடையிலான போர் காட் பகுதியில் உள்ள தாக்கூர்வாடிக்கு அருகேயும், கண்டாலா - மங்கி ஹில் இடையிலும் நேற்று அதிகாலை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால், மும்பை - புனே இடையே ரயில் சேவை முடங்கியது.

கனமழையால், 'இந்திராணி எக்ஸ்பிரஸ், டெக்கான் எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' உட்பட 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. வெளி மாநிலங்களில் இருந்து மும்பை, புனே வந்த 20க்கும் மேற்பட்ட ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன.

தண்டவாளங்களில் தேங்கிய மழைநீரால் மும்பையில் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. மும்பை - புனே அதிவிரைவுச்சாலையில், கோபோலி - குஸ்கான் பகுதியில், சுரங்கப்பாதையின் வாசல் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது; பெரிய பாறைகளும், இடிபாடுகளும் விழுந்ததை அடுத்து, அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மறு உத்தரவு வரும் வரை, மும்பை - புனே இடையேயான பயணத்தை தவிர்க்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. ராய்கட் மாவட்டத்தில் பெய்த கனமழையால், மும்பை - கோவா நெடுஞ்சாலை வெள்ளக்காடாக மாறியது.

எச்சரிக்கை


இதற்கிடையே, மஹாராஷ்டிராவில் மேலும் மூன்று தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது, மும்பை, தானே, ராய்கட் மாவட்டங்களில் அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தில் மூவர் பலி
புனே மாவட்டத்தில் படான் கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன; ஐந்து வீடுகள் மண்ணில் புதைந்தன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர். இடிபாடுகளில் 30க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மஹாராஷ்டிராவில் கடந்த 30 முதல் இதுவரை கனமழைக்கு 13 பேர் பலியாகியுள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us