தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வானில் வட்டமடித்த போது பகீர்! தீப்பிடித்து நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்

வானில் வட்டமடித்த போது பகீர்! தீப்பிடித்து நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்

வானில் வட்டமடித்த போது பகீர்! தீப்பிடித்து நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்


ADDED : அக் 02, 2024 10:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 10:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புனே; மஹாராஷ்டிர மாநிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புனே நகரில் உள்ள ஆக்ஸ்போர்டு கோல்ப் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து அகஸ்டா 109 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. இதில் 2 விமானிகள் உள்பட 3 பேர் இருந்தனர். பயணிகள் யாரும் இல்லை.

இந் நிலையில் புறப்பட்ட இடத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. தீப்பிடித்து எரிந்தபடியே பாவ்தான் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் உள்பட ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் பலியாகினர்.

விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினரும், மீட்புக் குழுவினரும் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர். முதல்கட்ட தகவல்களின்படி ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு கடுமையான பனி மூட்டமே காரணம் என்று கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us