UPDATED : மே 03, 2024 02:14 PM
ADDED : மே 03, 2024 12:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: சிவசேனா துணைத்தலைவரை சுஷ்மா அந்தரேவை அழைக்கச் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில், விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ராய்காட்டின் மஹாத் நகரில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது, திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதற்கு முன்னர், விமானி கீழே குதித்து உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து சுஷ்மா கார் மூலம் பயணம் செய்தார்.