மோசமான வானிலையால் 30 நிமிடம் வானில் வட்டமடித்த ஹெலிகாப்டர்; ஒடிசா முதல்வர் தவிப்பு
மோசமான வானிலையால் 30 நிமிடம் வானில் வட்டமடித்த ஹெலிகாப்டர்; ஒடிசா முதல்வர் தவிப்பு
UPDATED : மே 06, 2024 06:14 PM
ADDED : மே 06, 2024 06:00 PM

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பிஜேடி தலைவர் வி.கே.பாண்டியன் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக 30 நிமிடங்கள் வானில் வட்டமடித்தது. பின்னர் ஜர்ஸுகுடா என்ற இடத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
ஒடிசாவில் சட்டசபை தேர்தலுடன், லோக்சபா தேர்தலும் நடக்க இருக்கிறது. இவை மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதற்காக ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் அவரது தனி செயலாளராக இருந்து தற்போது 5டி தலைவராக இருக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியனும் சேர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று பிரசாரம் முடித்து காரியார் பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்ட நவீன் பட்நாயக் மற்றும் வி.கே.பாண்டியன் ஆகியோர், புவனேஸ்வர் விமான நிலையத்தில் இறங்குவதாக இருந்தது. ஆனால் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சுமார் 30 நிமிடங்களாக தரையிறங்க முடியாமல் ஹெலிகாப்டர் வானில் வட்டமிட்டது. பின்னர் ஜர்ஸுகுடா என்ற இடத்தில் பத்திரமாக தரையிறங்கியது.