சபரிமலை பாதுகாப்பு அதிகரிக்க ஹெலிகாப்டர் கண்காணிப்பு
சபரிமலை பாதுகாப்பு அதிகரிக்க ஹெலிகாப்டர் கண்காணிப்பு
ADDED : டிச 25, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை:சபரிமலையில் நேற்று பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர் கண்காணிப்பு நடைபெற்றது.
சபரிமலையில் மண்டல கால பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரளா போலீசார் நேற்று ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதியம் 12:00 மணிக்கு சபரிமலை கோயிலின் மேற்பகுதியில் தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் பலமுறை அப்பகுதியில் வட்டமடித்தது.
இதுபற்றி சபரிமலையில் பணியில் உள்ள மத்திய அதிவிரைவு படை போலீஸ் உள்ளிட்ட எந்த பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படாததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சபரிமலை பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் உத்தரவின் பேரில் ஹெலிகாப்டர் கண்காணிப்பு நடைபெற்றதாக தெரியவந்தது.