புதுச்சேரியில் ஜனவரி முதல் ஹெல்மெட் கட்டாயம்! நடவடிக்கைக்கு ரெடியாகும் போலீஸ்
புதுச்சேரியில் ஜனவரி முதல் ஹெல்மெட் கட்டாயம்! நடவடிக்கைக்கு ரெடியாகும் போலீஸ்
ADDED : டிச 14, 2024 10:50 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் 2025 ஜனவரி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதாகும். ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
அதன்பின்னர் கவர்னராக இருந்த கிரண்பேடி, கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆனாலும், குறைந்த எண்ணிக்கையிலான வாகன ஓட்டிகள் அணிந்து சென்றனர்.
இந் நிலையில் 2025 ஜனவரி முதல் மீண்டும் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை போலீசார் கொண்டு வருகின்றனர். ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்த போக்குவரத்து போலீசார் இறங்கி உள்ளனர். அதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் இருக்கும் சூழலில், விதிகளை பின்பற்றி, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.