நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீரேந்தர் சிங் சகோதரர் வீரேந்திரா விக்ரம் சிங் கூறியதாவது:
என் தம்பி எனக்குதான் மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தான். கடைசியாக, மூச்சுத் திணறுகிறது என அனுப்பி இருந்தான். போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையை தொடர்பு கொண்டேன். எங்கிருந்தும் உதவி கிடைக்கவில்லை. யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகி வந்தான். அதற்காகத்தான் பனாரஸில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் டில்லி வந்தான். கரோல் பாக் விடுதி ஒன்றில் தங்கி இருந்தான். அம்மாவிடம் இன்னும் சொல்லவில்லை. எதிர்காலத்தை தீர்மானிக்க டில்லி வந்த என் தம்பி காலமாகி விட்டான்.
இவ்வாறு அவர் கூறினார்.