ஹேமந்த் சோரன் கைது வழக்கு : உச்சநீதிமன்ற சிறப்பு பெஞ்ச் விசாரணை
ஹேமந்த் சோரன் கைது வழக்கு : உச்சநீதிமன்ற சிறப்பு பெஞ்ச் விசாரணை
ADDED : பிப் 01, 2024 10:21 PM

ராஞ்சி: அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்துள்ள மனுவை சிறப்பு பெஞ்ச் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது எழுந்த குற்றச்சாட்டில் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து இரவு ஹேமந்த் சோரனை கைது செய்தனர். முன்னதாக கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஹேமந்த் சோரன் வழங்கினார்.
இந்நிலையில் தன்னை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம், எனவும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரிப்பதற்கான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சுந்தரேஷ், பெல்லா திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக பட்டியலிட்டுள்ளது.