ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை: புதிய முதல்வராகிறார் சாம்பை சோரன்
ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை: புதிய முதல்வராகிறார் சாம்பை சோரன்
UPDATED : ஜன 31, 2024 09:42 PM
ADDED : ஜன 31, 2024 08:39 PM

ராஞ்சி: அமலாக்கத்துறையால் கைது செய்ய்பபட்டு உள்ள ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சாம்பை சோரன் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
நில மோசடி, நிலக்கரி சுரங்க மோடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்து வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு கவர்னரை சந்தித்து பேசினர். அப்போது ஜார்க்கண்ட் முதல்வராக சாம்பை சோரனை முதல்வராக தேர்வுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஹேமந்த் சோரன் இன்று (31.01.2024)இரவு 8:35 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு வந்தார். ஹேமந்த் சோரனின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டதாக கூறப்டுகிறது.
8 மணி நேரம் விசாரணை
முதல்வர் பதவியிலிருந்து விலகிய ஹே மந்த் சோரன், தற்போது அமலாக்கத்துறை காவலில் உள்ளதாகவும், அவரிடம் நில மோசடி, தொடர்பாக 6 மணி நேரம் விசாரணை நடந்ததாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி., தெரிவித்துள்ளார்.
43 எம்.எல்.ஏக்கள் ஆதரவு
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சாம்பைசேரன் தனக்கு 43 எம்.எல்,ஏக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.