ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் மனு: 21 ம் தேதி விசாரணை
ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் மனு: 21 ம் தேதி விசாரணை
ADDED : மே 17, 2024 10:12 PM

புதுடில்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீதான இடைக்கால ஜாமின் மனுவை 21-ம் தேதிக்கு ஒத்தித்தது சுப்ரீம் கோர்ட்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், ஜன., 31ல் கைது செய்யப்பட்டார். நிலமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், கடந்த சில தினங்களுக்கு முன் நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை, கோடை விடுமுறைக்குப் பின் விசாரிப்பதாக அமர்வு கூறியது.
அவசரமாக விசாரிக்கும்படி, ஹேமந்த் சோரன் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கூறினார். வரும், 20ம் தேதிக்குப் பின் விசாரிப்பதாக அமர்வு கூறியது. ஆனால், அதற்கு முன் அவசரமாக விசாரிக்கும்படி, கபில் சிபில் வலியுறுத்தினார். இன்று நடந்த விசாரணையில் இடைக்கால ஜாமி்ன் வழங்க மறுத்த நீதிபதிகள் விசாரணையை 21-ம் தேதி ஒத்தி வைத்தனர்.

